Published:Updated:

அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி!

அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி!
அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி!

அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி!

அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி!

ஒடிசா: அணுஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்குகளை தாக்கவல்ல அக்னி-5 ஏவுகணை இரண்டாம் கட்ட சோதனை இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

ஒடிசா மாநிலம் வீலர் தீவில் இருந்து அக்னி 5 ஏவுகணை இன்று காலை ஏவப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை உருவாக்கிய இந்த ஏவுகணை, 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சீறிப்பாய்ந்து இலக்குகளை தாக்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. ‘அக்னி 1’ ஏவுகணை 700 கி.மீ. தூரம், ‘அக்னி 2’ 2000 கி.மீ. தூரமும், ‘அக்னி 3’ மற்றும் அக்னி 4 3500 கி.மீ. வரையும் தாக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது

தற்போது உருவாக்கப்பட்ட ‘அக்னி 5’ ஏவுகணை 5000 கி.மீ. பாய்ந்து சென்று தாக்கக் கூடியது. இது, ஆயிரம் கிலோ முதல் ஆயிரத்து 500 கிலோ வரை அணு ஆயுதங்களை ஏந்திச்செல்லும் திறன்கொண்டது.

##~~##
இந்த ஏவுகணை 50 டன் எடையும் 17 மீட்டர் உயரமும் கொண்டது. 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட அக்னி-5 ன் முதற்கட்ட சோதனை வெற்றியடைந்தது. இதையடுத்து தற்போது அக்னி 5 ஏவுகணையின் 2 ஆம் கட்ட சோதனையும் வெற்றி பெற்றுள்ளது.
அக்னி 5 ஏவுகணை வெற்றியை தொடர்ந்து, நீண்டதூரம் பயணிக்கும் ஏவுகணைகளைக் கொண்ட அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
அடுத்த கட்டுரைக்கு