Published:Updated:

ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பார்வையற்ற பட்டதாரிகள் கைது!

விகடன் விமர்சனக்குழு
ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பார்வையற்ற பட்டதாரிகள் கைது!
ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பார்வையற்ற பட்டதாரிகள் கைது!
ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பார்வையற்ற பட்டதாரிகள் கைது!

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பார்வையற்ற பட்டதாரிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, ஆசிரியர் தகுதி தேர்வில் 40 சதவீத மதிப்பெண்ணை தகுதியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற பட்டதாரிகள் போராடி வருகிறார்கள்.

9வது நாளான இன்று சென்னை கே.கே.நகரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அலுவலகத்தில் தங்களது அடையாள அட்டை, ஊன்றுகோல், சான்றிதழ்கள் ஆகியவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

##~~##
இதற்காக 50க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் ஆணையர் அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாற்றுதிறனாளிகள் கேட்டை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைய முயன்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக கே.கே. நகர் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளை கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.