Published:Updated:

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை வந்தார்!

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை வந்தார்!
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை வந்தார்!
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை வந்தார்!

புதுடெல்லி: சென்னையில் நடக்கும் இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை வந்துள்ளார்.

கர்நாடகம், தமிழகம், புதுச்சேரி ஆகிய மூன்று தென் மாநிலங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மூன்று நாள் பயணமாக நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டு கர்நாடகா சென்றார்.

மைசூரில் ஜே.எஸ்.எஸ். மஹாவித்யா பீடத்தின் ஜே.எஸ்.எஸ். மருத்துவமனையைத் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து இன்று காலை பிஜப்பூர் சைனிக் பள்ளியின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார்.

##~~##
இதையடுத்து, தமிழக அரசும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் இணைந்து நடத்தும் இந்திய சினிமா நூற்றாண்டு விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று மதியம் 3.40 மணிக்கு சென்னை வந்தார்.
சென்னை வந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று வரவேற்றார்.
இதையடுத்து, இன்று மாலை சென்னையில் நடக்கும் இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.