Published:Updated:

35 பாம்பன் மீனவர்கள் நாளை ராமேஸ்வரம் திரும்புகின்றனர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
 35 பாம்பன் மீனவர்கள் நாளை ராமேஸ்வரம் திரும்புகின்றனர்!
35 பாம்பன் மீனவர்கள் நாளை ராமேஸ்வரம் திரும்புகின்றனர்!

35 பாம்பன் மீனவர்கள் நாளை ராமேஸ்வரம் திரும்புகின்றனர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

 35 பாம்பன் மீனவர்கள் நாளை ராமேஸ்வரம் திரும்புகின்றனர்!

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 35 பாம்பன் மீனவர்கள் நாளை ராமேஸ்வரம் திரும்புகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி பாம்பன் தென்கடல் பகுதியில் இருந்து 5 படகுகளில் 35 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அன்று இரவு மீன்பிடித்து கொண்டிருந்த போது, தென்கடல் பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் 35 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றனர்.

தென் கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடிப்பதில்லை.

இந்நிலையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வழக்கத்திற்கு மாறாக சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாம்பன் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து மீனவர் சங்கங்கத்தினர், மகளிர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் கடந்த 19 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

##~~##
இந்நிலையில், இலங்கை சிறையில் இருந்து வந்த பாம்பன் மீனவர்கள் 35 பேரும் கடந்த 23 ஆம் தேதி புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மீனவர்களை விசாரணை செய்த நீதிபதி மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார். இவர்கள் சென்ற படகு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் கொழும்பில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

விடுதலை செய்யப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில் தங்களை நாடு திரும்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி முகாமில் இருந்த மீனவர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

இதன் பின் மீனவர்களை சந்தித்த இந்திய தூதரக அதிகாரிகள், மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் விளைவாக சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் பாம்பன் மீனவர்கள் 35 பேரும் நாளை இலங்கை கடற்படையினர் மூலம் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். இதையடுத்து, நாளை இரவு இந்த மீனவர்கள் ராமேஸ்வரம் வந்து சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரா.மோகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு