Published:Updated:

இலங்கை மீனவர்களின் காவல் 11 ஆம் தேதி வரை நீட்டிப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இலங்கை மீனவர்களின் காவல் 11 ஆம் தேதி வரை நீட்டிப்பு!
இலங்கை மீனவர்களின் காவல் 11 ஆம் தேதி வரை நீட்டிப்பு!

இலங்கை மீனவர்களின் காவல் 11 ஆம் தேதி வரை நீட்டிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இலங்கை மீனவர்களின் காவல் 11 ஆம் தேதி வரை நீட்டிப்பு!

ராமநாதபுரம்: ஸ்ரீவைகுண்டம் சிறையில் உள்ள இலங்கை மீனவர்களின் காவல் இம்மாதம் 11 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 17 ஆம் தேதி இலங்கை நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அந்த பகுதியில் ரோந்து சென்ற இந்திய கடலோர காவல் படையினர் இலங்கை மீனவர்களின் படகையும், அதில் இருந்த 5 மீனவர்களையும் பிடித்து, தூத்துக்குடி மாவட்டம், தரவைக்குளம் கடற்கரை பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

##~~##
இதையடுத்து, இலங்கை மீனவர்களான குமார்வாஸ், அந்தோணிராஜ் சியாபுல்ஸ்மிரல், அந்தோணிநியுமேன், இமானுவேல், வர்ணகுலசூர்ய சேசுதாஸ் ஆகிய 5 பேர் மீதும் தூத்துக்குடி, தெர்மல்நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த 18 ஆம் தேதி ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இலங்கை மீனவர்கள் 5 பேரையும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

மீனவர்களின் காவல் நேற்றுடன் முடிந்ததை தொடர்ந்து, இன்று காலை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் இலங்கை மீனவர்கள் 5 பேரும் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி தர்மன், 'இலங்கை மீனவர்களது நீதிமன்ற காவலை இம்மாதம் 11 ஆம் தேதி வரை நீட்டித்து' உத்தரவிட்டார். இதையடுத்து இலங்கை மீனவர்கள் ஸ்ரீவைகுண்டம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இரா.மோகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு