Published:Updated:

இலங்கை: தமிழக மீனவர்கள் 19 பேருக்கு காவல் நீட்டிப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இலங்கை: தமிழக மீனவர்கள் 19 பேருக்கு  காவல் நீட்டிப்பு!
இலங்கை: தமிழக மீனவர்கள் 19 பேருக்கு காவல் நீட்டிப்பு!

இலங்கை: தமிழக மீனவர்கள் 19 பேருக்கு காவல் நீட்டிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இலங்கை: தமிழக மீனவர்கள் 19 பேருக்கு  காவல் நீட்டிப்பு!

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 19 பேருக்கு வரும் 14ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி, புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டிணம் மற்றும் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 5 படகுகளையும் அதில் இருந்த 19 மீனவர்களையும் 20 ஆம் தேதி அதிகாலை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர்.

ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை அக்டோபர் 30 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், மீனவர்களின் காவல் முடிந்ததையடுத்து, இன்று மீண்டும் 19 மீனவர்களும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

##~~##
இதையடுத்து, 19 தமிழக மீனவர்களின் காவலை வரும் 14ஆம் தேதி வரை நீட்டித்து ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.


இரா.மோகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு