Published:Updated:

குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பதவி வகிக்கும் சட்டம் கோரி வழக்கு: மனுதாரருக்கு அபராதம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பதவி வகிக்கும் சட்டம் கோரி வழக்கு: மனுதாரருக்கு அபராதம்!
குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பதவி வகிக்கும் சட்டம் கோரி வழக்கு: மனுதாரருக்கு அபராதம்!

குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பதவி வகிக்கும் சட்டம் கோரி வழக்கு: மனுதாரருக்கு அபராதம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பதவி வகிக்கும் சட்டம் கோரி வழக்கு: மனுதாரருக்கு அபராதம்!

சென்னை: ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. பதவி வகிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் ஒரு மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், ''தேசிய அளவிலும், மாநில அளவிலும், செயல்படும் அரசியல் கட்சிகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. பதவிகளை வகிக்கிறார்கள்.

பரம்பரையாக அரசியல் தலைவர்களின் வாரிசுகள் முக்கிய பதவிகளை வகிக்கிறார்கள். இதை 2வது கட்ட தலைவர்கள் எதிர்த்து கேட்டால் கொலை மிரட்டல், கட்சியில் இருந்து நீக்கம் போன்ற நடவடிக்கைகளுக்கு ஆளாகிறார்கள். எனவே ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. போன்ற பதவியை வகிக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்.

இதுகுறித்து, இந்திய தலைமை தேர்தல் கமிஷனர், மாநில தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு மனு கொடுத்தேன். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. பதவி வகிக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

##~~##
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் இந்த மனு மீதான விசாரணையை நடத்தி இன்று தீர்ப்பு வழங்கினர்.
அந்த தீர்ப்பில், ''மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளை அவமதிக்கும் விதமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுதாரர் வழக்கறிஞராக இருந்தும், சட்டம் தெரிந்தும் இப்படி ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை தள்ளுபடி செய்வதோடு, இதை தாக்கல் செய்த மனுதாரர் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இதை அவர் இரண்டு தவணையாக செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாதபட்சத்தில் அவரிடம் இருந்து தொகையை வசூலிக்க சென்னை மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளனர்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு