Published:Updated:

பட்ஜெட்: தமிழ்நாட்டுக்குத் தனி ரேடார்; வானிலைக் கணிப்பில் வருகிறது மாற்றம்!

வானிலைக் கணிப்பு

இரண்டு ரேடார்கள் நிறுவப்பட இருப்பது தென், மேற்கு மாவட்டங்களில் தவறும் கணிப்புகளை இல்லாமல் செய்ய உதவும். நாட்டில் வேறு எந்தப் பெரிய மாநிலங்களிலும் இல்லாத வகையில் 100 சதவிகித வானிலைக் கணிப்பைப் பெறும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறும்.

பட்ஜெட்: தமிழ்நாட்டுக்குத் தனி ரேடார்; வானிலைக் கணிப்பில் வருகிறது மாற்றம்!

இரண்டு ரேடார்கள் நிறுவப்பட இருப்பது தென், மேற்கு மாவட்டங்களில் தவறும் கணிப்புகளை இல்லாமல் செய்ய உதவும். நாட்டில் வேறு எந்தப் பெரிய மாநிலங்களிலும் இல்லாத வகையில் 100 சதவிகித வானிலைக் கணிப்பைப் பெறும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறும்.

Published:Updated:
வானிலைக் கணிப்பு

வானிலையைத் துல்லியமாகக் கணிப்பதற்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தனி கட்டமைப்பு ஒன்றைத் தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. 2022-23-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தபோது, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

வானிலைக் கணிப்புக்கான தனி கட்டமைப்பு ஒன்றை மாநிலம் ஒன்று தனியாக நிறுவ இருப்பது நாட்டிலேயே இதுவே முதல்முறை. முதல் கட்டமாக, ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் இந்தக் கட்டமைப்பில் வானிலை பலூன் அமைப்பு, 2 வானிலை ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழைமானிகள், 11 தானியங்கி நீர்மட்டக் கருவிகள், அதிவேகக் கணினிகள் ஆகியவை அடங்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தக் கட்டமைப்பு உருவாக்கத்துக்கான ஆலோசனைக் குழுவில் புவியியல் தகவல் முறைமை நிபுணர் ராஜ் பகத், ‘தமிழ்நாடு வெதர்மன்’ பிரதீப் ஜான் போன்ற துறைசார் நிபுணர்களும், தன்னார்வல வானிலைக் கணிப்பாளர்களும் இடம்பெற்றிருந்தனர்.

வானிலை
வானிலை

இந்த முன்னெடுப்பு குறித்து குழுவில் இடம்பெற்றிருந்த புவியியல் தகவல் முறைமை நிபுணர் ராஜ் பகத் இந்த முன்னெடுப்பு குறித்துப் பேசும்போது, “கடந்த ஆண்டு டிசம்பர் 31 -ல் ஏற்பட்ட மழை பாதிப்பு போன்ற ஒரு அசம்பாவிதம் இனிமேல் நடந்துவிடக்கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. அதற்கான யோசனைகள் அரசாங்கத்திடம் இருக்கும் நிலையில், துறைசார் நிபுணர்கள், ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், தன்னார்வல வானிலைக் கணிப்பாளர்கள் என இத்துறை சார்ந்து இயங்குபவர்கள் இந்தத் தனி வானிலைக் கட்டமைப்பு உருவாக்கத்துக்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தோம்,” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து பேசிய அவர், “வானிலைக் கணிப்புகளில் பிரச்னை, முன்கணிப்பில் தவறுதல், கணிப்புக்குப் பிறகான அணுகுமுறை, காலநிலை மாற்றம் சார்ந்த நீண்ட காலப் பிரச்னைகளுக்குக் கவனம்கொடுத்தல், இதுசார்ந்து உருவாகும் தரவுகளின் பரமாரிப்பு எனப் பல தளங்களில் எங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம்.

மழைப்பொழிவு கண்காணிப்பு மட்டுமல்லாமல், ஆறு, குளம், ஏரி, ஓடை போன்ற நீர்நிலை அமைப்புகளின் நீர் அளவும் கண்காணித்துப் பராமரிக்கப்பட வேண்டும்; வானிலை மாறுபாடுகளால் எளிதில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளின் வரைபடத் தரவுகளை உருவாக்க வேண்டும் - இதன் தரவுகளைப் பகுப்பாய்வு செய்யும் மையப்படுத்தப்பட்ட அமைப்பு ஒன்றை அரசாங்கமே உருவாக்க வேண்டும் என்பவை என்னுடைய கோரிக்கைகளாக முன்வைத்தேன்,” என்றார்.

ராஜ் பகத் பழனிச்சாமி
ராஜ் பகத் பழனிச்சாமி

“தமிழ்நாட்டு வானிலைக் கணிப்புகளுக்கான சென்னை, காரைக்காலில் இருக்கும் இரண்டு ரேடார்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என்று தொடர் கோரிக்கைகள் எழுந்துவருகின்றன. இந்நிலையில், மாநிலத்துக்கென்று பிரத்யேகமாக இரண்டு ரேடார்கள் நிறுவப்பட இருப்பது தென், மேற்கு மாவட்டங்களில் தவறும் கணிப்புகளை இல்லாமல் செய்ய உதவும். நாட்டில் வேறு எந்தப் பெரிய மாநிலங்களிலும் இல்லாத வகையில் மாநிலப் பரப்பு முழுவதும் 100 சதவிகித வானிலைக் கணிப்பைப் பெறும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறும். ஏற்கெனவே உள்ள இரண்டு ரேடார்களின் பிரச்னைகள் தீர்க்கப்பட்டால், நான்கு ரேடார்கள் மேலதிக வானிலைக் கணிப்புகளை மேற்கொள்ள உதவும்!” என்கிறார் ராஜ் பகத்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism