Published:Updated:

எத்தனை அவதூறு வழக்கு போட்டாலும் கவலையில்லை: விஜயகாந்த்

விகடன் விமர்சனக்குழு
எத்தனை அவதூறு வழக்கு போட்டாலும் கவலையில்லை: விஜயகாந்த்
எத்தனை அவதூறு வழக்கு போட்டாலும் கவலையில்லை: விஜயகாந்த்
எத்தனை அவதூறு வழக்கு போட்டாலும் கவலையில்லை: விஜயகாந்த்

சென்னை: என் மீது எத்தனை அவதூறு வழக்கு போட்டாலும் கவலையில்லை என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தே.மு.தி.க. சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலத்தில் குர்பானி வழங்கும் நிகழ்ச்சி இன்று (16.10.2013) நடந்தது. இந்த விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு ஏழை, எளிய இஸ்லாமிய மக்களுக்கு குர்பானி வழங்கி சிறப்புரையாற்றினார்.

##~~##
அவர் பேசும்போது, ''சென்னையில் பல இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் இருக்கிறது. தமிழக அரசு என் மீது எத்தனை அவதூறு வழக்குகள் போட்டாலும் கவலையில்லை. ஜாதி, மதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை.

ஏற்கனவே நாட்டை ஆண்ட கட்சிகள் மக்களை ஏமாற்றி விட்டன. ஏமாற்றியவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள். தே.மு.தி.க.வும் ஒருநாள் ஆட்சியை பிடிக்கும்'' என்றார்.