Published:Updated:

ராமேஸ்வரம், காரைக்கால் மீனவர்களின் காவல் நீ்ட்டிப்பு!

விகடன் விமர்சனக்குழு
ராமேஸ்வரம், காரைக்கால் மீனவர்களின் காவல் நீ்ட்டிப்பு!
ராமேஸ்வரம், காரைக்கால் மீனவர்களின் காவல் நீ்ட்டிப்பு!
ராமேஸ்வரம், காரைக்கால் மீனவர்களின் காவல் நீ்ட்டிப்பு!

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள ரமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களுக்கும், காரைக்காலைச் சேர்ந்த 32 மீனவர்களுக்கும் சிறை காவல் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 3ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர். விசாரணைக்குப் பின் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் 4 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இன்று மூன்றாவது முறையாக ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேருக்கும் நவம்பர் 13ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். அதையடுத்து மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

##~~##
இதேபோல் கடந்த 9 ஆம் தேதி காரைக்காலில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர். இவர்கள் திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்தனர். இன்று காலை மீண்டும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை நவம்பர் 16ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 32 மீனவர்களும் நீர்கொழும்பு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தீபாவளி நெருங்கும் நேரத்தில் சிறையில் இருக்கும் மீனவர்களின் குடும்பத்தினர் மீனவர்கள் இல்லாமல் பண்டிகை கொண்டாட முடியாமல் வருத்தம் அடைந்துள்ளனர்.