Published:Updated:

டீசல் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை: வீரப்ப மொய்லி தகவல்!

டீசல் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை: வீரப்ப மொய்லி தகவல்!
டீசல் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை: வீரப்ப மொய்லி தகவல்!
டீசல் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை: வீரப்ப மொய்லி தகவல்!

கொச்சி: மாதம் ஒருமுறைக்கு அதிகமாக டீசல் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

பெட்ரோலிய புவி இயற்பியல் வல்லுனர் சமூகம் சார்பில், 10-வது பன்னாட்டு பைனியல் மாநாடு மற்றும் கண்காட்சி, கேரள மாநிலம் கொச்சியில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கலந்து கொண்டார்.

##~~##
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “டீசல் விலை ஒவ்வொரு மாதமும் 45 பைசா முதல் 55 பைசா வரை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த திட்டம் தற்போது நடைமுறையிலும் உள்ளது. எனவே டீசல் விலையை மேலும் உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை” என்றார்.
சமையல் கியாஸ் மானிய திட்டத்துக்கு இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் பெயர் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்படுவது குறித்து கேட்டபோது, ‘அப்படி எதுவும் இல்லை. ஆதார் அட்டை கட்டாயமில்லை என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் பார்க்கும் போது, இந்த கேள்விக்கே இடமில்லை’ என்றார்.