Published:Updated:

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்கியதோடு, வலைகளையும் அறுத்து சேதப்படுத்தியுள்ளனர்.

கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வதும், தாக்குவதும், வலைகளை சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

##~~##
இலங்கை கடற்படையினர் அத்துமீறல்களை தடுக்க தமிழக மீனவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், பல்வேறு போராடங்களை நடத்தியும் இதுவரை எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி புதுக்கோட்டை மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை தாக்கியதோடு, அவர்களின் வலைகளையும் அறுத்து சேதப்படுத்தி உள்ளனர். மேலும் மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
இலங்கை கடற்படையின் அத்து மீறல்கள் ராமேசுவரம் மீனவர்கள் இடையே பதட்டத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.