Published:Updated:

காரைக்கால்-நாகையைச் சேர்ந்த 110 மீனவர்களுக்கு 26ஆம் தேதி வரை சிறை!

Vikatan Correspondent
காரைக்கால்-நாகையைச் சேர்ந்த 110 மீனவர்களுக்கு 26ஆம் தேதி வரை சிறை!
காரைக்கால்-நாகையைச் சேர்ந்த 110 மீனவர்களுக்கு 26ஆம் தேதி வரை சிறை!
காரைக்கால்-நாகையைச் சேர்ந்த 110 மீனவர்களுக்கு 26ஆம் தேதி வரை சிறை!

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 110 மீனவர்களை இம்மாதம் 26ஆம் தேதி வரை சிறை வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நாகப்பட்டினத்திலிருந்தும், புதுவை மாநிலம் காரைக்காலில் இருந்தும் கடந்த நேற்று முன் தினம் (11ஆம் தேதி) 600க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று (12ஆம் தேதி) அதிகாலை 4 மணியளவில் நாகப்பட்டினத்திலிருந்து 40 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் இலங்கை கடல் பகுதிக்கு சிறை பிடித்து சென்றனர்.

##~~##
பகல் 3 மணி வரை பருத்திதுறை - திரிகோணமலை இடையே உள்ள கடல் பகுதியில் 200க்கும் மேற்பட்ட மீனவர்களையும் 33 விசைப்படகுகளையும் சிறை பிடித்து வைத்திருந்தனர். இந்நிலையில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களில் 110 பேரையும், அவர்கள் சென்ற 15 படகுகளையும் இலங்கை திரிகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். இலங்கை கடல் பகுதியில் உள்ள முல்லைதீவு அருகே உள்ள செம்மலை அலம்பல் எனும் பகுதியில் நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக கூறி நேற்று இரவு திரிகோணமலை போலீசாரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர்.
போலீசார் தமிழக மீனவர்கள் 110 பேரையும் விசாரணை செய்த பிறகு நேற்று இரவு திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களிடம் விசாரணை செய்த நீதிபதி இம்மாதம் 26ஆம் தேதி வரை சிறையில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மீனவர்கள் அனைவரும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதனிடையே இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற மீனவர்களையும், தங்கள் படகுகளையும் விடுவிக்கக் கோரி நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரா.மோகன்