Published:Updated:

ராமேஸ்வரம், ஜெகதாபட்டினம் மீனவர்களின் காவல் 5வது முறை நீட்டிப்பு!

Vikatan Correspondent
ராமேஸ்வரம், ஜெகதாபட்டினம் மீனவர்களின் காவல் 5வது முறை நீட்டிப்பு!
ராமேஸ்வரம், ஜெகதாபட்டினம் மீனவர்களின் காவல் 5வது முறை நீட்டிப்பு!
ராமேஸ்வரம், ஜெகதாபட்டினம் மீனவர்களின் காவல் 5வது முறை நீட்டிப்பு!

ராமேஸ்வரம்: ஜெகதாபட்டினம், ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரின் காவலை 5வது முறையாக இலங்கை நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், ராமேஸ்வரத்தை சேர்ந்த 30 மீனவர்களை கடந்த மாதம் 5ஆம் தேதி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 30 பேரின் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து மல்லாகம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

##~~##
அப்போது, அவர்களின் காவலை வரும் 20ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 30 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இரா.மோகன்