Published:Updated:

தமிழகம் வந்தது கிருஷ்ணா நதி நீர்!

Vikatan Correspondent
தமிழகம் வந்தது கிருஷ்ணா நதி நீர்!
தமிழகம் வந்தது கிருஷ்ணா நதி நீர்!
தமிழகம் வந்தது கிருஷ்ணா நதி நீர்!

சென்னை: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் இன்று காலை தமிழக எல்லையை வந்தடைந்தது.

சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தமிழகத்திற்கு, ஆந்திர அரசு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆண்டுதோறும் 12 டி.எம்.சி நீரை வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

இருமாநில எல்லையில் உள்ள உப்பலமடுகு பகுதியில் கிருஷ்ணா நதி கால்வாய் மீது கட்டப்பட்டிருந்த மதகு உடைந்து. அதனை சரி செய்யும் பணியில் ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 6 மாதங்களாக ஈடுபட்டிருந்தனர். இதனால், கிருஷ்ணா நீர் வருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

##~~##
இந்நிலையில் நேற்று முன்தினம், நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரத்து 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கு, இன்று அதிகாலை 5 மணிக்கு வந்தடைந்தது. தற்போது, விநாடிக்கு 43 கன அடி வீதம் வரும் தண்ணீர், படிப்படியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.