Published:Updated:

ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் சிறை பிடிப்பு!

விகடன் விமர்சனக்குழு
ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் சிறை பிடிப்பு!
ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் சிறை பிடிப்பு!
ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் சிறை பிடிப்பு!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை மீண்டும் இலங்கை கடற்படையினர் இன்று சிறை பிடித்து சென்றுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து இன்று கலை 600க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். அவர்களை இடைமறித்த இலங்கை கடற்படையினர், படக்குகளை சுற்றி வளைத்து மீனவர்களை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணைக்கு பின் சுவிட்டர் என்பவருக்கு சொந்தமான விசைப் படகினையும் அதில் சென்ற 6 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றுள்ளனர்.

##~~##
மேலும், 2 படகுகளையும் 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வழக்கமாக இரவு நேரத்தில் மீனவர்களை சிறைபிடிக்கும் இலங்கை கடற்படையினர், இன்று வழக்கத்திற்கு மாறாக பகல் நேரத்திலேயே சிறை பிடித்து சென்றிருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1 வாரத்தில் மட்டும் 3 முறை மீன் பிடிக்க சென்ற 50க்கும் மேற்பட மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுது மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரா.மோகன்