Published:Updated:

தனியார் செவிலியர்களுக்கு அரசு வேலையை எதிர்த்த மனு தள்ளுபடி!

Vikatan Correspondent
தனியார் செவிலியர்களுக்கு அரசு வேலையை எதிர்த்த மனு தள்ளுபடி!
தனியார் செவிலியர்களுக்கு அரசு வேலையை எதிர்த்த மனு தள்ளுபடி!
தனியார் செவிலியர்களுக்கு அரசு வேலையை எதிர்த்த மனு தள்ளுபடி!

சென்னை: தனியார் செவிலியர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட மறுசீராய்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தனியார் செவிலியர் பள்ளி மாணவிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பணி வழங்குவதை எதிர்த்து கருப்பசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுசீராய்பு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து இன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், 2012ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழக அரசின் அரசாணை செல்லும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

வழக்கு தொடர்ந்த மாணவிகள் கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தி்ல் தற்கொலை மிரட்டல் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.