Published:Updated:

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரம் வந்தனர்!

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 21 மீனவர்கள் நேற்று (31ஆம் தேதி) நள்ளிரவு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரம் வந்தனர்!

கடந்த 19ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 21 மீனவர்களையும், அவர்கள் சென்ற 5 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர் கடற்படையினரின் விசாரணைக்கு பின் மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி மீனவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து 21 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் உள்பட மொத்தம் 98 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரம் வந்தனர்!

இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டார். இதையடுத்து சிறை வைக்கப்பட்ட மீனவர்கள் பகுதி, பகுதியாக விடுவிக்கப்பட்டு தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். விடுவிக்கப்பட்ட மீனவர்களில் நேற்று முன்தினம் (30ஆம் தேதி) மாலை 19 பேர் ராமேஸ்வரம் வந்தடைந்தனர். இந்நிலையில் நேற்று (31ஆம் தேதி) நள்ளிரவு 21 மீனவர்களும், அவர்களது 5 விசைப்படகுகளுடன் ராமேஸ்வரம் வந்தடைந்தனர். மேலும் 58 மீனவர்கள் காரைக்கால் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இலங்கை சிறையில் இருந்த அனைத்து மீனவர்களும் விடுவிக்கப்பட்ட நிலையில் இருநாட்டு மீனவர்கள் இடையேயான 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இதனிடையே இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து செல்லப்பட்ட படகுகள் தலைமன்னாரில் உள்ள கடற்படை முகாமின் பாதுகாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த படகுகளையும் இலங்கை அரசு விடுவித்ததை தொடர்ந்து ராமேஸ்வரத்தை சேர்ந்த 6 படகுகளை எடுத்து வர மீனவர்கள் சிலர் தலைமன்னார் சென்றிருந்தனர். மீனவர்கள் அங்கு சென்று பார்த்த போது சிறைபிடித்து செல்லப்பட்ட படகுகளில் 2 படகுகள் சேதமடைந்த நிலையில் கடலில் மூழ்கிய நிலையில் இருந்துள்ளன. இதனால் ஓரளவு சேதமடைந்திருந்த 4 படகுகளை மட்டும் நேற்றிரவு ராமேஸ்வரத்திற்கு மீட்டு வந்தனர்.

இரா.மோகன்

படங்கள்: உ.பாண்டி