Published:Updated:

சேது சமுத்திர திட்டம் கொண்டுவர பாடுபடுவோம்: ஜி.ராமகிருஷ்ணன்

சேது சமுத்திர திட்டம் கொண்டுவர பாடுபடுவோம்: ஜி.ராமகிருஷ்ணன்
சேது சமுத்திர திட்டம் கொண்டுவர பாடுபடுவோம்: ஜி.ராமகிருஷ்ணன்
சேது சமுத்திர திட்டம் கொண்டுவர பாடுபடுவோம்: ஜி.ராமகிருஷ்ணன்

மதுரை: மத சாயம் பூசி கிடப்பில் போடப்பட்டுள்ள சேது சமுத்திர திட்டத்தை கொண்டுவர  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமக்கிருஷ்ணன் மதுரையில் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது, ''வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது பெறும் சவாலாக இருக்கிறது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியுள்ளார். ஆனால், வேட்பளர்கள் இரவு 10 மணிக்கு மேல் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்யலாம் என்கிறார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவில்லை.

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் பொதுவாகவே செயல்பட வேண்டும். கடந்த காலங்களில் ஆளுங்கட்சியின் தேர்தல் விதிமீறல்கள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, போன்றவற்றை ஆதாரங்களுடன் புகார் தெரிவித்தபோதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.

மத்தியில் பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாத மாற்று அரசை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த தேர்தலை சந்திக்கிறது. அதன் அடிப்படையில் தேர்தல் வாக்குறுதிகளை வகுத்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மத்தியக் குழுவில் தேர்தல் அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மாநில குழுவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையாக இருப்பது சேது சமுத்திர திட்டம். அதற்கு மத சாயம் பூசி கிடப்பில் போடப்பட்டுள்ளது. அத்திட்டம் கொண்டு வர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும். அதே போல், சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளையை அமைப்பது, தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகளில் மத்திய அரசின் நிர்வாக மொழியாக அங்கீகரிப்பது, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தன் தீர்ப்பை அமல்படுத்துவது, காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு உரிய உரிமையை பெற்றுத் தருவது ஆகியவற்றுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராடும்" என்றார்.