Published:Updated:

அரசு கேபிள் டி.வி.: மத்திய அரசின் மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு!

அரசு கேபிள் டி.வி.: மத்திய அரசின் மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு!
அரசு கேபிள் டி.வி.: மத்திய அரசின் மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு!
அரசு கேபிள் டி.வி.: மத்திய அரசின் மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு!

சென்னை: அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு தொடர்பான மத்திய அரசின் மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பில் குறுக்கீடு செய்ய கூடாது என உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய மனு தாக்கல் செய்தது.

அதில், அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பில் குறுக்கிட கூடாது என்ற ஆணைக்கு தடை விதிக்க வேண்டும். டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான உரிமம் வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவாகும். அரசு கேபிள் டி.வி.க்கு சாதகமாக தனி நீதிபதி பிறப்பித்த ஆணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணையை வருகின்ற 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.