Published:Updated:

கிருஷ்ணகிரியில் ரூ.10 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்!

Vikatan Correspondent
கிருஷ்ணகிரியில் ரூ.10 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்!
கிருஷ்ணகிரியில் ரூ.10 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்!
கிருஷ்ணகிரியில் ரூ.10 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்!

கிருஷ்ணகிரி: தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் ரூ.10 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவை, ஓசூருக்கு உரிய ஆவணங்களின்றி வேனில் கொண்டு செல்லப்பட்ட 10.49 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறக்கும் படையினர் நடத்திய விசாரணையில், 12 நிறுவனங்களுக்கு விற்பதற்காக வேனில், 37.36 கிலோ தங்கம், 22 கிராம் வைரம், 4.46 கிலோ வெள்ளி நகைகளை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.