Published:Updated:

சென்ட்ரல் குண்டுவெடிப்பு; மோடி பிரசாரத்தை சீர்குலைக்க பாகிஸ்தானின் சதி: பொன்.ராதாகிருஷ்ணன்

விகடன் விமர்சனக்குழு
சென்ட்ரல் குண்டுவெடிப்பு; மோடி பிரசாரத்தை சீர்குலைக்க பாகிஸ்தானின் சதி: பொன்.ராதாகிருஷ்ணன்
சென்ட்ரல் குண்டுவெடிப்பு; மோடி பிரசாரத்தை சீர்குலைக்க பாகிஸ்தானின் சதி: பொன்.ராதாகிருஷ்ணன்
சென்ட்ரல் குண்டுவெடிப்பு; மோடி பிரசாரத்தை சீர்குலைக்க பாகிஸ்தானின் சதி: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: சென்ட்ரல் குண்டுவெடிப்பு சம்பவம், மோடி பிரசாரத்தை சீர்குலைக்க பாகிஸ்தானின் சதி என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை 2 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது. இதுகுறித்து  தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''இந்தியாவில் வலுவான பிரதமர் வந்துவிடக்கூடாது என்பது பாகிஸ்தானின் எண்ணமாக உள்ளது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு நிகழ்த்தி இருக்கிறது. பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர், நரேந்திரமோடி வெற்றி பெற்றால் இந்த பிராந்தியம் கலவரப் பகுதியாக மாறும் என்று கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாக சென்னையில் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலும் பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனர். இந்த நிலையில் ரயில் குண்டு வெடிப்பு நடந்து இருக்கிறது. இந்த ரயில் பெங்களூரில் இருந்து புறப்பட்டு சென்னை வந்து பின்னர் நெல்லூர், குண்டூர், விசாகப்பட்டினம் வழியாக கவுகாத்தி செல்கிறது. நரேந்திரமோடி இன்று நெல்லூர், குண்டூர், விசாகப்பட்டினத்தில் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

எனவே, அவரை மையமாக வைத்து இந்த சதி செயலை திட்டமிட்டு செய்து இருக்கிறார்கள். இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். உளவுத்துறை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இது உலக அளவிலான பயங்கரவாத செயல் என்று கருதுகிறேன். பாகிஸ்தானின் திட்டமிட்ட தாக்குதல் இது. எனவே, ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்" என்று கூறினார்.