Published:Updated:

சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்: டி.ஜி.பி. ராமானுஜம்!

விகடன் விமர்சனக்குழு

சென்னை: சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. ராமானுஜம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக டி.ஜி.பி. ராமானுஜம் கூறும்போது, ''சாதாரண அளவில்தான் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. மிகப் பெரிய குண்டு வெடிப்பு அல்ல. ரயிலில் மிகப் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை.

சென்னைக்கு இலக்கு இருப்பதாக கருதவில்லை. ஏனென்றால் ரயில் ஒரு மணி நேரம் காலதாமதமாக வந்த பிறகே குண்டு வெடித்துள்ளது. இதனால், வேறு இடம் இலக்காக இருக்கலாம்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து முக்கிய தகவல் கிடைத்துள்ளது. இந்த வழக்கை ரயில்வே போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.யின் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது" என்றார்.