Published:Updated:

அரசு சட்டக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு!

Vikatan Correspondent
அரசு சட்டக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு!
அரசு சட்டக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு!
அரசு சட்டக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விபரங்கள் அறிவிக்கப்படடுள்ளது.

இதுகுறித்து, அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி விடுத்துள்ள அறிவிப்பில், ''3 ஆண்டு சட்டப்படிப்பிற்கு இம்மாதம் (மே) 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கான தர வரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்படும். மேலும், 3 ஆண்டு சட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு செப்டம்பர் 3வது வாரத்தில் நடைபெறும்.

மேலும், 5 ஆண்டு சட்டப்படிப்பிற்கு இம்மாதம் (மே) 12ஆம் தேதி முதல் ஜூன் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்'' எனக் கூறியுள்ளார்.