Published:Updated:

தமிழக- இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது!

தமிழக- இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது!
தமிழக- இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது!
தமிழக- இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது!

கொழும்பு: கொழும்புவில் நடந்த தமிழக - இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

தமிழக - இலங்கை மீனவர்களுக்கு இடையே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை கொழும்புவில் நேற்று தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் 17 பேரும், 9 அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அதில், மத்திய அரசு சார்பில், வெளியுறவுத்துறை இணைச்செயலாளர் உட்பட 4 பேர் இடம் பெற்றனர். இலங்கை சார்பில், 20 மீனவ பிரதிநிதிகளும், மீன் வளத்துறையை சேர்ந்த 10 அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஜனவரி மாதம் தமிழகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டது.

இரட்டைமடி வலை போன்ற தடைசெய்யப்பட்ட, வலைகளை பயன்படுத்த இலங்கை மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதே‌போல, மீன்பிடிப்பதிலுள்ள எல்லை வரையறைகளை நீக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் இன்று நடக்க இருந்த பேச்சுவார்த்தைக்கு தமிழக மீனவர்கள் செல்லவில்லை. இதனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.

2004 முதல் 10 ஆண்டுகளாக நடந்த மீனவர்கள் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.