Published:Updated:

ஜனாதிபதி உரை மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக உள்ளது: விஜயகாந்த் கருத்து!

விகடன் விமர்சனக்குழு
ஜனாதிபதி உரை மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக உள்ளது: விஜயகாந்த் கருத்து!
ஜனாதிபதி உரை மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக உள்ளது: விஜயகாந்த் கருத்து!
ஜனாதிபதி உரை மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக உள்ளது: விஜயகாந்த் கருத்து!

சென்னை: மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் ஜனாதிபதி உரை அமைந்துள்ளது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரையில், வளமான இந்தியாவை உருவாக்க, பல மக்கள் நலத்திட்டங்கள் இடம் பெற்றிருப்பதை தே.மு.தி.க. சார்பில் வரவேற்கிறேன். ஜனாதிபதி உரையில் இந்திய மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்ற ஊழலை ஒடுக்குவதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் உறுதியான நடவடிக்கைகள் குறித்து அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

கருப்பு பணத்தை மீட்கவும், சட்டமன்றம், பாராளுமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு பெற்றுத்தரவும், சமூகத்தில் அனைவருக்கும் சிறப்பான கல்வி கொடுக்கும் பொருட்டு ஒவ்வொரு மாநிலத்திலும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். அமைக்க இருப்பதும், விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்கும் பொருட்டு, விவசாயம் லாபம் மிக்க தொழிலாக மாற்றுவதற்கு வழிவகை செய்ய இருப்பதும்.

நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு செயல் வடிவம் தருவதும், அனைவருக்கும் குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்வதும், நாட்டின் இயற்கை வளங்களான கனிமங்கள், நிலக்கரி, அலைக்கற்றை ஒதுக்கீடு போன்றவற்றில் தெளிவான விதிமுறைகள் உருவாக்க முற்பட்டு இருப்பதும், இளைஞர்களின் நாடான இந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்கிட திட்டங்கள் அறிவித்திருப்பதும், புதிய சுகாதாரக்கொள்கையின் மூலம் மக்கள் அனைவருக்கும் தேசிய காப்பீடு திட்டத்தை உருவாக்குவதும், கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் பொருட்டு, நவீன கட்டமைப்பு வசதிகளை கொண்ட நகரங்களை உருவாக்குவதும்.

பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்தி நாடு முழுவதும் தொழில் பூங்காக்களை அமைத்தல், சரக்கு போக்குவரத்திற்கான தனி பாதைகள் அமைக்கப்படுதல், ரயில் பாதைகளை மேம்படுத்துவதற்கு வைர நாற்கர ரயில் திட்டம் அறிவித்திருப்பதும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாட்டின் நிலைமை சீர்படும் என்ற மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக சிறிய அரசு, சிறந்த நிர்வாகம் என்ற சிறந்த கொள்கையுடன் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் ஜனாதிபதி உரை அமைந்துள்ளது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஆட்சி பொற்கால ஆட்சியாக மலரும் என்ற நம்பிக்கையை நம் எல்லோருக்கும் தரும் விதத்தில் ஜனாதிபதி உரை அமைந்துள்ளதை தே.மு.தி.க. சார்பில் மனமுவர்ந்து வரவேற்கிறேன்" என்று கூறியுள்ளார்.