Published:Updated:

தமிழக மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படையின் தொடரும் அட்டூழியம்!

Vikatan Correspondent

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை, நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் மீண்டும் விரட்டி அடித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து வைத்துள்ள படகுகளை விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த ஜூன் 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

ராமேசுவரம் பகுதியிலிருந்து கடந்த திங்கள்கிழமை காலையில் 705 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். தனுஷ்கோடி கடல் பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 10க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளைச் சுற்றி வளைத்து விரட்டி அடித்துள்ளனர்.

மேலும், மீனவர்கள் மீன்பிடிக்க விரித்திருந்த வலைகளையும் அறுத்து சேதப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, மீனவர்கள் தங்கள் படகுகளைத் திருப்பிக் கொண்டு ராமேஸ்வரம் வந்து சேர்ந்துள்ளனர். ஒரு வாரத்திற்குப் பிறகு மீன் பிடிக்கச் செல்வதால் ஏராளமான மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து விரட்டியுள்ளது அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.