Published:Updated:

'ஈராக்கில் தவிக்கும் இந்தியர்களை தொடர்புகொள்ள முடியவில்லை!'

Vikatan Correspondent
'ஈராக்கில் தவிக்கும் இந்தியர்களை தொடர்புகொள்ள முடியவில்லை!'
'ஈராக்கில் தவிக்கும் இந்தியர்களை தொடர்புகொள்ள முடியவில்லை!'
'ஈராக்கில் தவிக்கும் இந்தியர்களை தொடர்புகொள்ள முடியவில்லை!'

புதுடெல்லி: ஈராக்கில் தவித்து வரும் இந்தியர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈராக்கில் ஆளும் ஷியா பிரிவு அரசுக்கு எதிராக, சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஈராக்கின் மோசூல், திக்ரித், சாதியா, ஜலாலா உள்ளிட்ட நகரங்களைக் கைபற்றியுள்ள அவர்கள், தலைநகர் பாக்தாத்தை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

பாக்தாத்திற்கு 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிளர்ச்சியாளர்கள், ராணுவத்துடன் கடுமையாக சண்டையிட்டு, ஒவ்வொரு நகரையும் தங்கள் வசப்படுத்தி வருகின்றனர். கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் பல இடங்களில் ராணுவ வீரர்கள் பின்வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட ஈராக்கின் மோசூல் நகரத்தில் சிக்கி தவித்துவரும் 40 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என  வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து, ஈராக்கிற்கான முன்னாள் தூதர் சுரேஷ் ரெட்டி பாக்தாத் செல்வதாகவும் வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.