Published:Updated:

ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் மீண்டும் சிறையில் அடைப்பு!

Vikatan Correspondent
ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் மீண்டும் சிறையில் அடைப்பு!
ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் மீண்டும் சிறையில் அடைப்பு!
ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் மீண்டும் சிறையில் அடைப்பு!

சென்னை: வரதட்சணை புகாரில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமார் புழல் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.

வரதட்சணை புகாரில் சிக்கி கைதான ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் தலைவலி காரணமாக கடந்த 8ஆம் தேதி புழல் சிறையிலிருந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். டாக்டர்கள் குழுவினர் அவருக்கு தீவிர பரிசோதனைகள் செய்தனர்.

தலைவலிக்கான காரணம் குறித்து அறிய எம்.ஆர்.ஐ., சி.டி. உள்ளிட்ட ஸ்கேன்களும் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து நேற்றிரவு டாக்டர்கள் அறிவுரையின்படி வருண்குமார் மீண்டும் புழல் சிறைச்சாலைக்கு பலத்த காவல்துறையினரின் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.