Published:Updated:

புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

விகடன் விமர்சனக்குழு

ராமேஸ்வரம்: புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேரை கைது செய்து இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தில் இருந்து நூற்றுக்கணக்கான படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்று இரவு அவர்கள் கோடியக்கரை கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 3 விசைப்படகுகளையும் அதில் சென்ற 11 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றனர்.

மேலும், அந்த பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களையும் விரட்டி அடித்துள்ளனர். ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 46 மீனவர்கள் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றிருப்பது மீனவர்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலினால் குறைந்த அளவிலேயே விசைபடகுகள் மீன்பிடிக்க சென்று வந்தன. தொடரும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கையினால், ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்களும் அறிவிக்கப்படாத வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரா.மோகன்