Published:Updated:

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தை எதிர்த்தவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்!

விகடன் விமர்சனக்குழு
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தை எதிர்த்தவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்!
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தை எதிர்த்தவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்!
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தை எதிர்த்தவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்!

சென்னை: அரசு வழக்கறிஞர்களின் நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த பாரதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு, புதுச்சேரியில் அரசு வழக்கறிஞர்களின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதியானவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கதல்ல என்று கூறி தள்ளுபடி செய்த நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.