Published:Updated:

ஈராக்கில் கடத்தப்பட்ட இந்திய தொழிலாளர்கள் ரகசிய இடத்தில் சிறைவைப்பு!

விகடன் விமர்சனக்குழு
ஈராக்கில் கடத்தப்பட்ட இந்திய தொழிலாளர்கள் ரகசிய இடத்தில் சிறைவைப்பு!
ஈராக்கில் கடத்தப்பட்ட இந்திய தொழிலாளர்கள் ரகசிய இடத்தில் சிறைவைப்பு!
ஈராக்கில் கடத்தப்பட்ட இந்திய தொழிலாளர்கள் ரகசிய இடத்தில் சிறைவைப்பு!

சண்டிகார்: ஈராக்கில் தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ள 39 இந்தியர்களையும் லாரியில் கடத்திச் சென்று ரகசிய இடத்தில் சிறை வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈராக்கில் ஆளும் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் போர் புரிந்து வருகின்றனர். இந்த போரில் ஈராக்கிலுள்ள முக்கிய நகரங்களான திக்ரித், மொசூல் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். தீவிரவாதிகள் திக்ரித் நகரைக் கைப்பற்றியபோது, அங்குள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த 46 இந்திய நர்சுகளும், மொசூல் நகரில் 40 இந்திய தொழிலாளர்களும் தீவிரவாதிகளிடம் சிக்கினர். இவர்களில் ஒருவர் தப்பிவந்துவிட்டார். மீதமுள்ளவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், மொசூல் நகரில் தீவிரவாதிகளிடம் சிக்கிய இந்தியர்கள் அனைவரும் ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, 8 மாதத்திற்கு முன் ஈராக்கில் பணிபுரிந்த பர்வீந்தர் சிங் என்பவர் கூறுகையில், ''நான் பஞ்சாப் மாநிலம், ஹோசியார் பூரைச் சேர்ந்தவன். நான் 8 மாதங்களுக்கு முன்பு ஈராக்கில் பணியாற்றி வந்தேன். தற்போது எனது சகோதரர் மற்றும் 2 உறவினர்கள் மொசூரில் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி ஈராக்கில் இருக்கும் எனது சகோதரர் தர்மிந்தர் குமாரிடம் இருந்து எனக்கு போன் வந்தது. அப்போது, மொசூல் நகரில் தீவிரவாதிகளிடம் சிக்கிய இந்தியர்கள் அனைவரையும் ஒரு லாரியில் ஏற்றி அவர்களை ரகசிய இடத்தில் சிறை வைத்துள்ளதாக கூறினார். அதன் பிறகு மீண்டும் எனது சகோதரரை தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால், அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது'' என்றார்.