Published:Updated:

புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேருக்கு 7ஆம் தேதி வரை சிறை!

புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேருக்கு 7ஆம் தேதி வரை சிறை!
புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேருக்கு 7ஆம் தேதி வரை சிறை!
புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேருக்கு 7ஆம் தேதி வரை சிறை!

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேரையும் 7ஆம் தேதி வரை சிறையிலடைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தில் இருந்து நூற்றுக்கணக்கான படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்று இரவு அவர்கள் கோடியக்கரை கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 3 விசைப்படகுகளையும் அதில் சென்ற 11 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றனர்.

இதையடுத்து, 11 மீனவர்களும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, மீனவர்கள் அனைவரையும் அடுத்த மாதம் (ஜூலை) 7ஆம் தேதி வரை சிறையிலடைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 11 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இரா.மோகன்