Published:Updated:

சொந்த ஊர் திரும்பினர் புதுக்கோட்டை மீனவர்கள்!

சொந்த ஊர் திரும்பினர் புதுக்கோட்டை மீனவர்கள்!
சொந்த ஊர் திரும்பினர் புதுக்கோட்டை மீனவர்கள்!
சொந்த ஊர் திரும்பினர் புதுக்கோட்டை மீனவர்கள்!

ராமேஸ்வரம்: இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டையை சேர்ந்த 24 மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.

புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் 24 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த 18ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேரையும் நேற்று ஊர்க்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்தது.

இதைத் தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலையான புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேரும் இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் இன்று மாலை சொந்த ஊர் திரும்பினர். அவர்களை குடும்பத்தினர், உறவினர்கள் கட்டித்தழுவி வரவேற்றனர்.