Published:Updated:

இலங்கை சிறையிலிருந்த நாகை மீனவர்கள் 7 பேர் விடுதலை!

இலங்கை சிறையிலிருந்த நாகை மீனவர்கள் 7 பேர் விடுதலை!
இலங்கை சிறையிலிருந்த நாகை மீனவர்கள் 7 பேர் விடுதலை!
இலங்கை சிறையிலிருந்த நாகை மீனவர்கள் 7 பேர் விடுதலை!

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகப்பட்டினம் மீனவர்கள் 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 20ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 7 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் 7 பேரும் நடுக்கடவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்து சென்றனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை செய்த நீதிபதி 7 மீனவர்களையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து 7 மீனவர்களும் திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மீண்டும் இன்று (26ஆம் தேதி) 7 மீனவர்களும் திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து 7 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், அவர்களது படகு விடுவிக்கப்படவில்லை.

இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இருதினங்களில் சொந்த ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.