Published:Updated:

2ஜி வழக்கு: ஆ.ராசா மீதான குற்றச்சாட்டுகள் பதிவு தொடக்கம்!

Vikatan Correspondent
2ஜி வழக்கு: ஆ.ராசா மீதான குற்றச்சாட்டுகள் பதிவு தொடக்கம்!
2ஜி வழக்கு: ஆ.ராசா மீதான குற்றச்சாட்டுகள் பதிவு தொடக்கம்!
2ஜி வழக்கு: ஆ.ராசா மீதான குற்றச்சாட்டுகள் பதிவு தொடக்கம்!

புதுடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் பணி இன்று (1ஆம் தேதி) தொடங்கியது.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்கில், கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து சட்ட விரோதமான வழியில் ரூ.200 கோடி வந்ததாக புகார் கூறப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி.யைச் சேர்ந்த சரத்குமார் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் பணி இன்று (1ஆம் தேதி) சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கியது.

தி.மு.க. எம்.பி. கனிமொழி மீதான குற்றச்சாட்டுகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.