Published:Updated:

ஈராக்கிலிருந்து வந்த செவிலியர்களுக்கு வேலை அளிக்க முன்வந்துள்ள தொழிலதிபர்!

விகடன் விமர்சனக்குழு
ஈராக்கிலிருந்து வந்த செவிலியர்களுக்கு வேலை அளிக்க முன்வந்துள்ள தொழிலதிபர்!
ஈராக்கிலிருந்து வந்த செவிலியர்களுக்கு வேலை அளிக்க முன்வந்துள்ள தொழிலதிபர்!
ஈராக்கிலிருந்து வந்த செவிலியர்களுக்கு வேலை அளிக்க முன்வந்துள்ள தொழிலதிபர்!

கொச்சி: ஈராக்கில் இருந்து திரும்பி வந்த செவிலியர்களுக்கு எனது மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பு அளிக்க தயார் என வெளிநாட்டில் உள்ள இந்திய தொழிலதிபர் அறிவித்துள்ளார்.

ஈராக்கில் திக்ரித் பகுதியை கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த செவிலியர்கள் உள்பட 46 இந்திய செவிலியர்களை கடத்திச் சென்றனர்.

இதையடுத்து, தீவிரவாதக் குழுக்களுடன் பல்வேறு சமூக ஆர்வலர்கள், சர்வதேச அமைப்புகள் மூலம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் பலனாக கடந்த வியாழக்கிழமை 46 இந்திய செவிலியர் உள்ளிட்ட சிலரை தீவிரவாதிகள் விடுவித்தனர். இதையடுத்து 46 செவிலியர்கள் உள்பட 180 பேர் இன்று இந்திய விமானம் மூலம் கேரள மாநிலம், கொச்சி வந்தடைந்தனர்.

இந்நிலையில், ஈராக்கில் இருந்து திரும்பி வந்துள்ள செவிலியர்களுக்கு  வேலை கொடுக்க தயார் என ஐக்கிய அரேபிய நாட்டிலுள்ள இந்திய தொழிலதிபர்  ஒருவர் அறிவித்துள்ளார். பி.ஆர்.ஷெட்டி என்ற அந்த தொழிலதிபர், இதுகுறித்து கேரள பத்திரிகை ஒன்றில் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், ''எனக்கு வளைகுடா நாடுகளில் ஏராளமான மருத்துவமனைகள் உள்ளன. இவை தவிர, நேபாளம், பூடான், இந்தியா உள்ளிட்ட பகுதிகளிலும் மருத்துவமனைகள் உள்ளன.

இந்த மருத்துவமனைகளில் ஈராக்கில் இருந்து திரும்பியுள்ள இந்திய செவிலியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க என்னால் முடியும். எனவே, வேலை தேவைப்படும் செவிலியர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்'' என தெரிவிததுள்ளார்.