Published:Updated:

கச்சத்தீவு பகுதியில் கட்டணம் செலுத்தி மீன்பிடிக்கும் திட்டம் அமல்?

விகடன் விமர்சனக்குழு
கச்சத்தீவு பகுதியில் கட்டணம் செலுத்தி மீன்பிடிக்கும் திட்டம் அமல்?
கச்சத்தீவு பகுதியில் கட்டணம் செலுத்தி மீன்பிடிக்கும் திட்டம் அமல்?
கச்சத்தீவு பகுதியில் கட்டணம் செலுத்தி மீன்பிடிக்கும் திட்டம் அமல்?

சென்னை: மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக கச்சத்தீவு பகுதிகளில் கட்டணம் செலுத்தி, தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் முறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்துச் செல்வதும், அவர்களை தாக்குவதும், மீன் பிடி சாதனங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இலங்கை-இந்தியா மீனவர்களிடையே இருமுறை பேச்சு வார்த்தைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இருப்பினும் இந்த பேச்சுவார்த்தைகளில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.

இதையடுத்து, கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழக மீனவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும், கச்சத்தீவை மீட்பது குறித்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கச்சத்தீவு பகுதிகளில் கட்டணம் செலுத்தி தமிழக மீனவர்கள் தங்குதடையின்றி மீன் பிடிக்க ஏற்பாடு செய்து கொடுக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பினாலும், மத்திய அரசின் முடிவே இறுதியானதாக இருக்கும் என வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இந்நிலையில், இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ் அடுத்த வாரம் டெல்லி வர உள்ளார். அப்போது தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.