Published:Updated:

மலேசிய விமானத்திற்கு பின்னால் 25 கி.மீ. தொலைவில் வந்த மோடி விமானம்!

Vikatan Correspondent
மலேசிய விமானத்திற்கு பின்னால் 25 கி.மீ. தொலைவில் வந்த மோடி விமானம்!
மலேசிய விமானத்திற்கு பின்னால் 25 கி.மீ. தொலைவில் வந்த மோடி விமானம்!
மலேசிய விமானத்திற்கு பின்னால் 25 கி.மீ. தொலைவில் வந்த மோடி விமானம்!

புதுடெல்லி: உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபோது, அதற்கு பின்னால் அதே வான்வழியில் 25 கி.மீ. தொலைவில்தான் பிரதமர் நரேந்திர மோடி பயணித்த விமானமும் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைனில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 298 பேரும் உயிரிழந்தனர்.  கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம், கிரபோவோ என்ற கிராமம் அருகே விழுந்தது. 

இந்நிலையில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபோது, அதற்கு பின்னால் அதே வான்வழியில் 25 கி.மீ. தொலைவில்தான் பிரதமர் நரேந்திர மோடி பயணித்த விமானமும்  வந்ததாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. மலேசிய விமானம் ஏவுகணை தாக்குதலில் வீழ்த்தப்பட்டிருக்காவிட்டால் சம்பவம் நடந்த பகுதி வழியாகவே பிரதமர் நரேந்திர மோடி பயணித்த ஏர் இந்தியா-001 விமானமும் சென்றிருக்கும் என்று அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி பயணித்த ஏர் இந்தியா-001 விமானம் ஜெர்மனியின் பிராங்ஃப்ர்ட் நகரில் இருந்து புறப்பட்டது. மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட 1 மணி நேரத்தில் மோடியின் விமானமும் உக்ரைன் விமான பாதையில் பறந்திருக்கும். ஆனால், விமான ஓட்டி சாதுர்யமாக யோசித்து பயணத்தடத்தை மாற்றியிருக்கிறார் என்று விமான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மலேசிய விமானத்திற்கு பின்னால் 25 கி.மீ. தொலைவில் வந்த மோடி விமானம்!

உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷியாவுக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்கள், உக்ரைன் அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளனர். சமீபத்தில் உக்ரைனில் உள்ள கிரிமியா பகுதி, தனிநாடாக பிரகடனம் செய்து விட்டு, பிறகு ரஷியாவுடன் இணைந்தது. அதே பாணியில், கிழக்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்களும், தன்னாட்சி பிரகடனம் செய்து விட்டு, ரஷியாவுடன் இணைய விரும்புகிறார்கள். இதற்காக, அவர் கள் உக்ரைன் அரசுப்படைகளுடன் சண்டையிட்டு வருகிறார்கள். 

சண்டை நடைபெற்று வரும்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் விமானங்கள் உக்ரைன் மீதான லிவைவ் வழித்தடம், சிம்ஃபெர்பூல் வழித்தடம் ஆகிய இரண்டு மார்க்கங்களிலேயே சென்று வந்தன. ஆனால் கடந்த ஏப்ரலில் ஐ.நா விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட உத்தரவின் பேரில் அனைத்து விமானங்களும் லிவைவ் வழித்தடத்தை மட்டுமே பயன்படுத்தத் தொடங்கின. பாதுகாப்பு காரணங்களுக்காக ஐ.நா இந்த உத்தரவை பிறப்பித்தது. அதன்படியே பிரதமர் மோடி சென்ற விமானமும் லிவைவ் வழித்தடத்திலேயே சென்றுள்ளது.