Published:Updated:

புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேருக்கு 31 வரை காவல்!

Vikatan Correspondent
புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேருக்கு 31 வரை காவல்!
புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேருக்கு 31 வரை காவல்!
புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேருக்கு 31 வரை காவல்!

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேரை 31ஆம் தேதி வரை காவலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையிலிருந்து 5 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களின் படகு பழுதாகியது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 5 மீனவர்களையும் சிறைபிடித்துச் சென்றனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய இலங்கை கடற்படை, நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து 5 மீனவர்களையும் வரும் 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து 5 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கடலில் தத்தளித்த பழுதான படகை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.