Published:Updated:

இந்தியா - சீனா இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Vikatan Correspondent
இந்தியா - சீனா இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து!
இந்தியா - சீனா இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து!
இந்தியா - சீனா இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

புதுடெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடி -  சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் டெல்லியில் இன்று நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு நாடுகள் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ரயில்வே துறையில் ஒத்துழைப்பை நீட்டிப்பது, வணிகத்தில் இரு நாடுகளும் 5 ஆண்டுகளுக்கு இணைந்து செயல்படுவது என்பன உள்ளிட்ட 12 ஒப்பந்தங்கள் இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.

2015 ஆம் ஆண்டு 'இந்தியாவுக்கு செல்லும்' ஆண்டாக சீனாவில் கடைபிடிக்கப்படும் என்றும், 2016 ஆம் ஆண்டு ' சீனாவுக்கு செல்லும்' ஆண்டாக இந்தியாவில் கடைபிடிக்கப்படும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் சீனா இந்தியாவில் 20 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படும் போன்ற அம்சங்களும் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.

ரிலையன்ஸ் கம்யூனிகேசனுக்கு 2 ஒப்பந்தங்கள்

இதில் 2 ஒப்பந்தங்கள் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவன தலைவர் சி.எஸ். ராவ் மற்றும் சீன டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனங்களான இசட்.டி. இ. மற்றும் ஹுவாய் டெக்னாலஜிஸ் ஆகியவற்றுக்கிடையே கையெழுத்தாகி உள்ளது. ரிலையன்ஸ் 2ஜி மற்றும் 3 ஜி நெட் ஒர்க்குகளுக்கான உபகரணங்கள் மற்றும் விரிவாக்க பணிகளை மேற்கொள்வதற்காக இந்த ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டுள்ளன.

பெங்களூரு - மைசூர் ( சென்னை வழியாக) இடையே 640 கி.மீ. ரயில்வே பாதையை சீனா மேம்படுத்தி, தரம் உயர்த்தும். நிதித் துறையை பொறுத்தமட்டில் சீனாவின் அரசு வங்கியான பேங்க் ஆப் சீனா மும்பையில் கிளை ஒன்றை தொடங்கும். மேலும் இந்தியாவுக்கு எக்ஸிம் பேங்க் ஆப் சீனா வங்கி மூலம் பல பில்லியன் டாலர்களை சீனா இந்தியாவுக்கு கடனாக வழங்கும்.

மேலும் காற்றாலை, கடல் உணவு, ரசாயனம், பருத்தி மற்றும் மருந்து ஆகிய துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகி உள்ளது.

இண்டிகோ ஏர்லைனஸ் சீன தொழில் மற்றும் வர்த்தக வங்கியுடன் 2.6 பில்லியன் டாலர் தொகைக்கான லீசிங் மற்றும் ஃபைனான்சிங் ( leasing and financing) ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

அதேப்போன்று ஏர் இந்தியா நிறுவனத்துடன் லீஸ் மற்றும் ஃபைனான்ஸ் ஏர்கிராப்ட் ( lease & finance aircraft ) க்காக 2 பில்லியன் டாலர் ஒப்பந்தத்திற்கு சீனா பேச்சுவார்த்தை நடத்தும் என்பது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

முன்னதாக சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் மோடி நடத்திய பேச்சுவார்த்தையின்போது, இந்திய பகுதிக்குள் சீன படைகள் அத்துமீறி நுழைவது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்தார் என்று வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.