Published:Updated:

எல்லைப் பிரச்னைக்கு தீர்வு: சீன அதிபர் உறுதி

Vikatan Correspondent
எல்லைப் பிரச்னைக்கு தீர்வு: சீன அதிபர் உறுதி
எல்லைப் பிரச்னைக்கு தீர்வு: சீன அதிபர் உறுதி
எல்லைப் பிரச்னைக்கு தீர்வு: சீன அதிபர் உறுதி

புதுடெல்லி: எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் சீனா உறுதியுடன் இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்த அவர், பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்தது என்றார்.

குஜராத், மகாராஷ்டிராவில் தொழிற்பூங்காக்களை சீனா அமைக்கும் என்று தெரிவித்த ஜி ஜின்பிங், சார்க் கூட்டமைப்பில் சீனா உறுப்பு நாடாக இந்தியா ஆதரவு தரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியப் பொருட்களுக்கு சீனாவில் கூடுதல் சந்தை ஏற்படுத்தி தரப்படும் என்று கூறிய ஜின்பிங், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவுக்கு வருகை தரும் படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு 'இந்தியாவுக்கு செல்லும்' ஆண்டாக சீனாவில் கடைபிடிக்கப்படும் என்றும், 2016 ஆம் ஆண்டு ' சீனாவுக்கு செல்லும்' ஆண்டாக இந்தியாவில் கடைபிடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.