Published:Updated:

நில அபகரிப்பு வழக்கு: அழகிரியின் முன்ஜாமீன் நிபந்தனை ரத்து!

விகடன் விமர்சனக்குழு
நில அபகரிப்பு வழக்கு: அழகிரியின் முன்ஜாமீன் நிபந்தனை ரத்து!
நில அபகரிப்பு வழக்கு: அழகிரியின் முன்ஜாமீன் நிபந்தனை ரத்து!
நில அபகரிப்பு வழக்கு: அழகிரியின் முன்ஜாமீன் நிபந்தனை ரத்து!

மதுரை: நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரிக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீன் நிபந்தனையை மதுரை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம், சிவரக்கோட்டை அருகே தயா பொறியியல் கல்லூரிக்காக, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி உள்பட 7 பேர் ஆக்கிரமிப்பு செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு அழகிரி, மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தினமும் மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அழகிரிக்கு முன்ஜாமீன் வழங்கியிருந்தது.

இந்நிலையில், நிபந்தனையை தளர்த்தக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் அழகிரி வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், அழகிரிக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டது.