Published:Updated:

விண்ணப்பங்களில் விண்ணப்பதாரரே சான்றொப்ப கையொப்பமிடலாம்: தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை: அரசுப் பணி மற்றும் படிப்புக்கான விண்ணப்ப சான்றிதழ்களில் இனி விண்ணப்பதாரர்களே சான்றொப்ப கையொப்பமிடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசுப் பணி மற்றும் படிப்புகளுக்கான விண்ணப்பங்களில் அரசு பதிவு பெற்ற கெசட்டட் அலுவலர் அல்லது நோட்டரி பப்ளிக் ஆகியோரிடம் சான்றொப்பம் (அட்டஸ்டேஷன்) பெற வேண்டும் என்பது விதியாக இருந்தது.

ஒவ்வொரு தடவை சான்றொப்பம் வாங்குவதற்கு, ரூ.100 முதல் ரூ.500 வரை செலுத்த வேண்டும். இதனால்  வேலை தேடுபவர்கள், மாணவர்கள் என பலரும் சிரமப்பட்டு வந்தனர்.

மேலும், ஏதேனும் ஒரு சான்றிதழ் இல்லாவிட்டால், அதிகாரிகளும் கையெழுத்திட மறுத்து வந்தனர். இதனால் கிராமப்புற மக்களும், பழங்குடியின மக்களும் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், இனி வரும் காலங்களில் வேலை மற்றும் படிப்புகளுக்காக விண்ணப்பிக்கும் நபரே தனது விண்ணப்பத்தில் சான்றொப்ப கையெழுத்தை போட்டுகொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கான உத்தரவு அரசின் அனைத்து துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கடைசி கட்ட சரிபார்ப்பு பணியின்போது ஒரிஜினல் சான்றிதழை சமர்ப்பித்தால் போதுமானது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.