Published:Updated:

எஸ்.சி, எஸ்.டி மாணவர்களிடமிருந்து வசூலித்த பணத்தை கொடுக்க தனியார் கல்லூரிகளுக்கு உத்தரவு!

எஸ்.சி, எஸ்.டி மாணவர்களிடமிருந்து வசூலித்த பணத்தை கொடுக்க தனியார் கல்லூரிகளுக்கு உத்தரவு!
எஸ்.சி, எஸ்.டி மாணவர்களிடமிருந்து வசூலித்த பணத்தை கொடுக்க தனியார் கல்லூரிகளுக்கு உத்தரவு!
எஸ்.சி, எஸ்.டி மாணவர்களிடமிருந்து வசூலித்த பணத்தை கொடுக்க தனியார் கல்லூரிகளுக்கு உத்தரவு!

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ- மாணவிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை, தனியார் கல்வி நிறுவனங்கள் உடனடியாக கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "உயர் கல்வி பெறுவதற்கு பொருளாதாரம் தடையாக இருக்க கூடாது என்ற நோக்கிலும், அனைத்து சமுதாய மாணவ- மாணவிகளை போன்று ஆதிதிராவிட மாணவ-மாணவிகளும் உயர்கல்வி பெற வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையிலும், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவ- மாணவிகளும் போஸ்ட் மெட்ரிக் கல்வித் உதவித் தொகை திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின்படி, கற்பிப்பு கட்டணம் உட்பட கட்டாய திருப்பி செலுத்தப்படாத கட்டணங்கள், பராமரிப்புபடி போன்றவை அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் வழங்கப்படுகிறது.

தற்போது, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 2013-14ஆம் கல்வியாண்டினை பொறுத்தவரை அனைத்து அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கல்லூரிகளில் பயிலும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்துள்ள தகுதியுள்ள அனைத்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு தேவையான பராமரிப்புபடி மற்றும் கல்விக் கட்டணங்கள் அரசால் வழங்கப்பட்டு விட்டது.

2013-14ஆம் கல்வியாண்டினை பொறுத்தவரை நிலுவைத்தொகை ஏதுமி்ல்லை. அனைத்து சுயநிதி கல்லூரிகளும் அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணங்கள், சுயநிதி கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணங்கள் போன்றவற்றை தகுதியுள்ள மாணவர்களிடம் இருந்து வசூலிக்கக் கூடாது என்று அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பெரும்பாலான கல்லூரிகள் மாணவர்களிடம் இருந்து கல்விக் கட்டணங்களை வசூலித்திருப்பதாக புகார்கள் அரசிற்கு வந்துள்ளன.

மாணவர்களிடம் இருந்து கல்விக் கட்டணம் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்கள் அத்தொகையினை மாணவர்களுக்கு உடனடியாக செலுத்த வேண்டும். 2013-14ஆம் கல்வியாண்டில் கல்விக்கட்டணங்களை செலுத்தியுள்ள தகுதியுள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்வி நிறுவனங்களை தொடர்பு கொண்டு கல்விக்கட்டணங்களை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

2013-14 ஆம் கல்வியாண்டில் அனைத்து சுயநிதி கல்லூரிகளும் சுயநிதி கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு, அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணங்களை தகுதியுள்ள மாணவர்களிடம் இருந்து வசூலிக்கக் கூடாது " என்று தெரிவித்துள்ளது.