Published:Updated:

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்க்கவில்லை: சதானந்த கவுடா விளக்கம்!

மங்களூர்: வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை சேர்க்கவில்லை என்று மத்திய அமைச்சர் சதானந்த கவுடா விளக்கம் அளித்துள்ளார்.

கர்நாடக மாநிலம், மங்களூருவில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா, ''மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், எனது மகன் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு கூறப்பட்டது. என் மீது சொத்துக் குவிப்பு புகார் எழுந்துள்ளது. அண்மையில் எனது சகோதரியையும், அதன் பின்னர் தாயையும் இழந்து வாடும் நிலையில், தொடர்ந்து என் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுவது வேதனை அளிக்கிறது.

மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் நான் வருமானத்திற்கு பொருந்தாத வகையில் ரூ.10 கோடிக்கும் அதிகமான சொத்துகளைச் சேர்த்ததாக வெளியான செய்திகளில் உண்மையில்லை.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பெங்களூருவில் கட்டடம் ஒன்றை வாங்குவதற்கு முன்பணம் கொடுத்து வைத்திருந்தேன். பின்னர், தேர்தல் பணி காரணமாக, அந்த கட்டடத்தை வாங்க முடியவில்லை.

தேர்தலுக்குப் பின் ஓரியண்டல் வங்கியில் ரூ.8 கோடி கடன் பெற்று கட்டடம் வாங்கப்பட்டது. அதை வாங்கிய பிறகு தனியாருக்கு வாடகைக்கு விடுவதற்காக ரூ.2 கோடி முன்பணம் பெற்றுள்ளேன். அதற்கான ஆவணங்கள் உள்ளது. வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் நான் சொத்து சேர்க்கவில்லை" என்றார்.