Published:Updated:

மக்கள் நலப்பணியாளர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அவகாசம்!

மக்கள் நலப்பணியாளர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அவகாசம்!
மக்கள் நலப்பணியாளர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அவகாசம்!
மக்கள் நலப்பணியாளர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அவகாசம்!

புதுடெல்லி: தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில்,  மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் ஜனவரி 12ஆம் தேதிவரை அவகாசம் அளித்துள்ளது.

மக்கள் நல பணியாளர்கள் சுமார் 13,000 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அரசின் இந்த முடிவுக்கு எதிராகவும், மக்கள் நல பணியாளர்கள் நீக்கத்தை ரத்துச் செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மக்கள் நல பணியாளர் சங்கம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுகுணா, மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

இதன் தொடர்ச்சியாக, தனி நீதிபதி அளித்த இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை  விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அரசின் மனுவை தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் மனுவிற்கு பதில் அளிக்க மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் அவகாசம் கோரியது. இதையடுத்து, அவகாசம் அளித்த உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.