Published:Updated:

உணவு, ஊட்டச்சத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மீன்வளம்!

விகடன் விமர்சனக்குழு
உணவு, ஊட்டச்சத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மீன்வளம்!
உணவு, ஊட்டச்சத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மீன்வளம்!

மிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா சென்னை, ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில், ஆளுநர் கே.ரோசய்யா கலந்து கொண்டு, பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு முடித்த 99 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கினார். பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என 200க்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

உணவு, ஊட்டச்சத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மீன்வளம்!

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய கர்நாடக மாநிலம், சிவமோகா வேளாண் மற்றும் தோட்டக்கலை அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் வாசுதேவப்பா, "இந்திய உணவு உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் மீன்வளம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. 2013-14ஆம் ஆண்டில் 10 மில்லியன் மெட்ரிக் டன் அளவில் மீன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் நிலம் சார்ந்த (இன்லேண்டு) மீன் உற்பத்தி 6.14 மில்லியன் மெட்ரிக் டன். கடல் சார்ந்த மீன் உற்பத்தி 4 மில்லியன் மெட்ரிக் டன். மீன் உற்பத்தியில் கடந்த சில ஆண்டுகளாக நிலம் சார்ந்த மீன் வளர்ப்பின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது.

உணவு, ஊட்டச்சத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மீன்வளம்!

மீன் மற்றும் மீன் பொருட்கள் ஏற்றுமதி மூலம் 30 ஆயிரத்து 213 கோடியளவில் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. மொத்த ஏற்றுமதியில் 3 சதவிகிதமும், வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் 20 சதவிகிதமும் மீன் பொருட்களின் பங்கு இருந்து வருகிறது. ஆனால் இந்த மீன்களை பதப்படுத்துவதற்கு உள்கட்டமைப்பும், உள்நாட்டு சந்தையில் மீன்கள் வீணாவதை தடுக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 1980களில் தொடங்கப்பட்ட நீலப் புரட்சியால் மீன் வளர்ப்பு, நன்னீர் மீன் வளர்ப்பு மக்கள் மத்தியில் பரவலானது. இன்று மீன் வளர்ப்பு, நன்னீர் மீன் வளர்ப்பு நம் நாட்டின் உணவு உற்பத்தியில் முக்கிய பிரிவாக இருந்து வருகிறது.

பொருளாதார வளர்ச்சி, அதிகரித்து வரும் மக்கள் தொகையின் காரணமாக நாளுக்கு நாள் மீன்களின் தேவை அதிகரித்து வருகிறது. சுவையும், தரமும் மீன் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதை பயன்படுத்திக் கொண்டு சுயதொழில் முனைவோர், விவசாயிகள், பெண்கள் என அனைவரும் மீன் வளர்ப்பில் ஈடுபட வேண்டும்.

தமிழ்நாட்டில் தற்போது 2.23 லட்சம் பேர் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில்தான் அதிகளவில் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்" என்றார்.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் மணிமாறன் பேசும்போது, "மீன் வளத்துக்கென்று 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்தப் பல்கலைக்கழகம். இதன்கீழ் தூத்துக்குடியில் மீன்ளவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமும், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் நாகப்பட்டினத்தில் மீன்வளத் தொழில்நுட்ப மையங்களும், சென்னை அடுத்த மாதவரத்தில் மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையமும் செயல்பட்டு வருகிறது.

இதோடு கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், கன்னியாகுமரி மாவட்டம் காந்திபுரம் மற்றும் பரக்கை, சென்னை மாவட்டம் வானியன்சாவடி, ஈரோடு மாவட்டம் பவானிசாகர், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் ஆராய்ச்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மீன்வளத்தைப் பற்றிய பட்ட மற்றும் ஆராய்ச்சி படிப்புகளோடு, விவசாயிகளுக்கு பயிற்சிகளும் தொழில்நுட்ப மையங்கள் மூலம் வழங்கி வருகிறோம். தொடர்ந்து மீன்வளம் பற்றிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அனைத்து பங்களிப்பையும் செய்து வருகிறோம்" என்றார்.

த. ஜெயகுமார்,

படங்கள்: ச. சந்திரமௌலி (மாணவ பத்திரிகையாளர்)