Published:Updated:

ராமேஸ்வரம் மீனவர்கள் 54 பேர் இலங்கை சிறையில் அடைப்பு!

Vikatan Correspondent
ராமேஸ்வரம் மீனவர்கள் 54 பேர் இலங்கை சிறையில் அடைப்பு!
ராமேஸ்வரம் மீனவர்கள் 54 பேர் இலங்கை சிறையில் அடைப்பு!
ராமேஸ்வரம் மீனவர்கள் 54 பேர் இலங்கை சிறையில் அடைப்பு!

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 54 பேரும் விசாரணைக்கு பின் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் இருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற 54 மீனவர்களையும் 10 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று சிறைப்பிடித்து சென்றனர்.

இதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 33 மீனவர்கள், இலங்கை கடற்படையின் விசாரனைக்கு பின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த 33 மீனவர்களையும், வருகின்ற 27 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, 33 மீனவர்களும் அனுராதபுரம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.

மேலும், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடித்து செல்லப்பட்ட புதுக்கோட்டை மீன்வர்கள் 21 பேர் நெடுந்தீவு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு கடற்படையினரால் விசாரணை நடத்தப்பட்டனர். அதன்பின் 21 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர்கள் அனைவரையும் வருகின்ற ஏப்ரல் மாதம்  2 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 21 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.

மீனவர்கள் பிரச்னை குறித்து இந்திய-இலங்கை அரசு அதிகாரிகள் மற்றும் இரு நாட்டு மீனவர்களிடையே இம்மாதம் 24 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில், 54 மீன்வர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்று சிறையில் அடைத்திருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.