Published:Updated:

முல்லைப் பெரியாறில் நிபுணர்கள் சோதனை

முல்லைப் பெரியாறில் நிபுணர்கள் சோதனை

அக்.6,2011

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, முல்லைப் பெரியாறு அணையின் உறுதியை ஆராய்வதற்காக, புனேயைச் சேர்ந்த மத்திய ஆய்வாளர்கள், அதிர்வலைச்சோதனை நடத்தி வருகின்றனர்.

தென் தமிழகத்தின் ஜீவாதாரமாக இருக்கும் முல்லைப் பெரியாறு அணையின் உறுதி குறித்து, அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையிலான ஐவர் குழுவை, உச்சநீதிமன்றம் நியமித்தது.

இந்த குழுவின் பரிந்துரைப்படி, முல்லைப் பெரியாறு அணைப்பகுதியிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும் பல்வேறு ஆய்வுகளை இக்குழுவினர் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், புனேயைச் சேர்ந்த மத்திய ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த திரிபாதி தலைமையிலான குழுவினர், அதிநவீன கருவிகள் மூலம் அணையில் அதிர்வலைச் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று நடைபெற்ற முதல்கட்ட அதிர்வலைச் சோதனை வெற்றிகரமாக நடந்தது. 2-வது நாளாக இன்றும் ஆய்வு நடைபெறுகிறது.

அடுத்த கட்டுரைக்கு